ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்..
சனி, 6 ஆகஸ்ட், 2011
இந்தியாவா இது அதிசயப்பட்டேன் என்னை கிள்ளி பார்த்தேன்..
அதிகாலை
சூரியன் உறங்கி
சோம்பலை முறித்து
வானத்தின் ஜன்னலில்
எட்டி பார்க்கும் நேரம்
சூரியனை எழுப்புவதாக
நினைத்து சேவல் கனவுகளை கலைத்தது
ஆலமரத்தில் பறவைகளின் சத்தம்
அலாரம் அடித்ததில் கரைந்துபோனது
கதவை திறந்தேன்
காலைத் தென்றல் வீச
வாலை ஆட்டும் நாய் வாசலில்
எப்பொழுதும் லாவகமாய்
நியூஸ் பேப்பர் பந்து வீசி
வாசல்கேட்டை விக்கெட் எடுப்பவன்
பேப்பரை கையில் திணித்து
குட்மார்னிங் சொன்னான்
அலுவலகம் கிளம்பினேன்
மாடி வீட்டு மாமிகள் வீசும்
குப்பை குளியல் இல்லை
தெருவெங்கும்
கைபேசி அலராத
வைப்ரேஷன் அமைதி
துலக்கி வைத்த வெள்ளி
குத்துவிளக்காய் வீதிகள்
டீ கடையின் பெஞ்ச்
பிணம் தூக்கியாய் மாறின
பாலிதீன் குப்பைகள் காணவில்லை
பாதாள சாக்கடை
தூர்வார அவசியமில்லை
மீண்டும் மஞ்சள் பைகள்
பஸ் நிறுத்தம்
எச்சில் படாத தூண்
நிறுத்தம் தாண்டா பேருந்து
சில்லறை கேட்டும்
சத்தம்போடா நடத்துனர்
செல்பேசி பேசாமல்
ஸ்கூல் வேனை முந்தாமல்
ஆம்புலன்சுக்கு வழிவிட்டு
சீராக ஓட்டும் ஓட்டுனர்
ஹெல்மெட் அணிந்த
இரு சக்கர சிறுத்தை ஓட்டிகள்
சீட்பெல்ட் அணிந்த
நவீன தேரோட்டி கண்ணன்கள்
சம்திங் வாங்காத டிராபிக் காவலர்கள்
சாலை விதிகளை மீறா பாதசாரிகள்
வியாபாரிகள் இல்லாத பாதைஓரம்
சாலை ஓரங்கள் சோலைவனமாய்
எப்பொழும் மூடா ரேஷன் கடைகள்
தப்பேதும் நடக்காத அளவுகளில்
தரமான பொருட்கள்
பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ்
மருத்துவமனையிலும் இடுகாட்டிலும்
இலவசமாய் கொடுக்க கண்டேன்
வேலைக்கு பதிவு செய்ய ஆளில்லாததால்
வேறு துறைக்கு மாறும் அலுவலர்கள்
விசா வாங்க ஆளில்லாத அமெரிக்க
தூதரகம் - மூடும் யோசனை
பரிசீலனையில்
மனித கழிவுகளை இயந்திரம் அள்ள
இலவசம் கொடுக்காத அரசாங்கம்
ஊழல் செய்யாத அரசியல்வாதிகள்
லஞ்சம் வாங்காத அரசு அலுவலர்கள்
கட்ட பஞ்சாயத்து நடக்காத காவல்நிலையம்
டொனேஷன் வாங்காத கல்விநிலையங்கள்
காப்பிடேஷன் வாங்காத கல்லூரிகள்
இந்தியாவா இது அதிசயப்பட்டேன்
என்னை கிள்ளி பார்த்தேன்
அலாரம் அடித்தது துள்ளி எழுந்தேன்
இதுவரை கண்டது கனவா - இறைவா
இது நனவாக வேண்டிக்கொண்டேன்.
சூரியன் உறங்கி
சோம்பலை முறித்து
வானத்தின் ஜன்னலில்
எட்டி பார்க்கும் நேரம்
சூரியனை எழுப்புவதாக
நினைத்து சேவல் கனவுகளை கலைத்தது
ஆலமரத்தில் பறவைகளின் சத்தம்
அலாரம் அடித்ததில் கரைந்துபோனது
கதவை திறந்தேன்
காலைத் தென்றல் வீச
வாலை ஆட்டும் நாய் வாசலில்
எப்பொழுதும் லாவகமாய்
நியூஸ் பேப்பர் பந்து வீசி
வாசல்கேட்டை விக்கெட் எடுப்பவன்
பேப்பரை கையில் திணித்து
குட்மார்னிங் சொன்னான்
அலுவலகம் கிளம்பினேன்
மாடி வீட்டு மாமிகள் வீசும்
குப்பை குளியல் இல்லை
தெருவெங்கும்
கைபேசி அலராத
வைப்ரேஷன் அமைதி
துலக்கி வைத்த வெள்ளி
குத்துவிளக்காய் வீதிகள்
டீ கடையின் பெஞ்ச்
பிணம் தூக்கியாய் மாறின
பாலிதீன் குப்பைகள் காணவில்லை
பாதாள சாக்கடை
தூர்வார அவசியமில்லை
மீண்டும் மஞ்சள் பைகள்
பஸ் நிறுத்தம்
எச்சில் படாத தூண்
நிறுத்தம் தாண்டா பேருந்து
சில்லறை கேட்டும்
சத்தம்போடா நடத்துனர்
செல்பேசி பேசாமல்
ஸ்கூல் வேனை முந்தாமல்
ஆம்புலன்சுக்கு வழிவிட்டு
சீராக ஓட்டும் ஓட்டுனர்
ஹெல்மெட் அணிந்த
இரு சக்கர சிறுத்தை ஓட்டிகள்
சீட்பெல்ட் அணிந்த
நவீன தேரோட்டி கண்ணன்கள்
சம்திங் வாங்காத டிராபிக் காவலர்கள்
சாலை விதிகளை மீறா பாதசாரிகள்
வியாபாரிகள் இல்லாத பாதைஓரம்
சாலை ஓரங்கள் சோலைவனமாய்
எப்பொழும் மூடா ரேஷன் கடைகள்
தப்பேதும் நடக்காத அளவுகளில்
தரமான பொருட்கள்
பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ்
மருத்துவமனையிலும் இடுகாட்டிலும்
இலவசமாய் கொடுக்க கண்டேன்
வேலைக்கு பதிவு செய்ய ஆளில்லாததால்
வேறு துறைக்கு மாறும் அலுவலர்கள்
விசா வாங்க ஆளில்லாத அமெரிக்க
தூதரகம் - மூடும் யோசனை
பரிசீலனையில்
மனித கழிவுகளை இயந்திரம் அள்ள
இலவசம் கொடுக்காத அரசாங்கம்
ஊழல் செய்யாத அரசியல்வாதிகள்
லஞ்சம் வாங்காத அரசு அலுவலர்கள்
கட்ட பஞ்சாயத்து நடக்காத காவல்நிலையம்
டொனேஷன் வாங்காத கல்விநிலையங்கள்
காப்பிடேஷன் வாங்காத கல்லூரிகள்
இந்தியாவா இது அதிசயப்பட்டேன்
என்னை கிள்ளி பார்த்தேன்
அலாரம் அடித்தது துள்ளி எழுந்தேன்
இதுவரை கண்டது கனவா - இறைவா
இது நனவாக வேண்டிக்கொண்டேன்.
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை இதோ.....
செவ்வாய், 31 மே, 2011
ரெடி படத்துக்கு இலவச விளம்பரம் தொடர்கிறது….!
சல்மான்கான், அசின் ஜோடியாக நடித்த ரெடி படம் வருகிற 3-ந்தேதி ரிலீசாகிறது. இதில் இருவரின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளதாக செய்தி பரவியுள்ளது.
இதுகுறித்து அசின் கூறுகையில், “ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்.
அவர் திறமையான நடிகர். படப்பிடிப்பில் அடிக்கடி ஜோக் அடித்து சிரிக்க வைப்பார். இமேஜ் பார்க்க மாட்டார். பிரதிபலன் எதுவும் பார்க்காமல் மற்ற வர்களுக்கு உதவி செய்வார். கேமரா முன்னால் வந்து விட்டால் வேறு மாதிரி மாறிவிடுவார். அவருக்கு நிகர் அவரேதான். ஸ்ரீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போனோம். சல்மான்கானுடன் சேர்ந்து அந்த நாடுகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம், ” என்றார்.
ரெடி படத்துக்கு இலவச விளம்பரம் தொடர்கிறது….!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



